சிறுவர்களுக்கான Google Payments தனியுரிமை வழிகாட்டி

உங்கள் வயதைத் தேர்வுசெய்யுங்கள்: 6-8 வயது 9-12 வயது

6-8 வயது

உங்கள் Google Payments தகவல்களை Google எப்படிப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?

இந்தப் பக்கம் சிறுவர்களுக்கானது! Google Paymentsஸில் Google உங்கள் தகவல்களை எப்படிப் பயன்படுத்துகிறது, பாதுகாப்பாக வைத்திருக்கிறது என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்கள் இங்கே உள்ளன.

பெற்றோர் கவனத்திற்கு: 13 வயதுக்குட்பட்ட (அல்லது உங்கள் நாட்டில் பொருத்தமான வயது) சிறுவர்களுக்காக Family Link மூலம் நிர்வகிக்கப்படும் Google கணக்குகளுக்கு மட்டுமே இந்தத் தகவல்கள் பொருந்தும். கூடுதல் விவரங்களுக்கு, எங்கள் தனியுரிமை அறிக்கையையும் தனியுரிமைக் கொள்கையையும் பாருங்கள்.

Googleளுக்கு என்னென்ன தகவல்கள் தேவை?

அனைத்துத் தயாரிப்புகளுக்காகவும் Google சேகரிக்கும் தகவல்கள் மட்டுமல்லாமல், Google Payments சிறப்பாகச் செயல்பட உங்களிடமிருந்து சில அடிப்படைத் தகவல்களும் எங்களுக்குத் தேவை.

பதிவு செய்யும்போது கேட்கப்படும் தகவல்கள்

சில நேரங்களில், அனைத்தும் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் உள்ளதா என்பதைச் சரிபார்க்க, இன்னும் கூடுதல் தகவல்களையும் நாங்கள் கேட்கக்கூடும்.

பிற இடங்களில் இருந்து பெறப்படும் தகவல்கள்

நீங்கள் ஏதாவது வாங்கும்போது பெறப்படும் தகவல்கள்

எனது தகவல்களை Google எதற்காகப் பயன்படுத்துகிறது?

அனைத்துத் தயாரிப்புகளுக்கும் Google உங்கள் தகவல்களைப் பயன்படுத்தும் முறைகளுடன் கூடுதலாக, Google Payments தொடர்பான பின்வரும் செயல்கள் போன்றவற்றுக்காகவும் நீங்கள் வழங்கும் தகவல்களைப் பயன்படுத்துகிறோம்:

Google எனது தகவல்களைப் பகிருமா?

அனைத்துத் தயாரிப்புகளுக்கும் Google உங்கள் தகவல்களைப் பகிரும்முறைகளுடன் கூடுதலாக, Google Payments சரியாகச் செயல்படுவதற்காகவும் உங்கள் தகவல்களைப் பிறரிடம் நாங்கள் பகிரக்கூடும். இதற்கான சில உதாரணங்கள்:

எனது பெற்றோரிடம் என்னென்ன கட்டுப்பாடுகள் உள்ளன?

உங்கள் பெற்றோரால் இவற்றைச் செய்ய முடியும்:

Google எனது தகவல்களை எப்படிப் பாதுகாப்பாக வைத்திருக்கும்?

உங்கள் தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க Google தீவிரமாகப் பணியாற்றுகிறது. உங்கள் கடவுச்சொற்களையும் பின்களையும் (PIN) ரகசியமாக வைத்திருப்பதன் மூலம் நீங்கள் உதவலாம்.

நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்:

9-12 வயது

Google Payments பயன்படுத்துவது தொடர்பான உங்கள் தனியுரிமை குறித்துத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?

அப்படியென்றால், சரியான பக்கத்திற்குதான் வந்துள்ளீர்கள்! உங்கள் தகவல்களை நாங்கள் எப்படிப் பயன்படுத்துகிறோம், பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறோம் என்பது போன்ற சிறுவர்கள் அதிகம் கேட்கும் கேள்விகளைப் படியுங்கள்.

பெற்றோர் கவனத்திற்கு: 13 வயதுக்குட்பட்ட (அல்லது உங்கள் நாட்டில் பொருந்தமான வயது) சிறுவர்களுக்காக Family Link மூலம் நிர்வகிக்கப்படும் Google கணக்குகளுக்கு மட்டுமே இந்தத் தகவல்கள் பொருந்தும். கூடுதல் விவரங்களுக்கு, எங்கள் தனியுரிமை அறிக்கையையும் தனியுரிமைக் கொள்கையையும் பாருங்கள்.

Googleளுக்கு என்னென்ன தகவல்கள் தேவை?

அனைத்துத் தயாரிப்புகளுக்காகவும் Google சேகரிக்கும் தகவல்கள் மட்டுமல்லாமல், Google Payments உங்களுக்குச் சரியாகச் செயல்படுவதை உறுதிசெய்ய, நாங்கள் மற்ற தகவல்களையும் கேட்க வேண்டியிருக்கும்.

பதிவு செய்யும்போது கேட்கப்படும் தகவல்கள்

உங்கள் Google கணக்கில் நாங்கள் சேமிக்கும் சில தகவல்கள் இங்கே உள்ளன. சில தரவு உங்கள் சாதனத்திலும் சேமிக்கப்படக்கூடும்.

சில நேரங்களில் உங்கள் தகவல்களையோ அடையாளத்தையோ சரிபார்க்க உதவ, இன்னும் கூடுதல் தகவல்களை எங்களுக்கு அனுப்பும்படியோ கேள்விகளுக்குப் பதிலளிக்கும்படியோ உங்களைக் கேட்கக்கூடும்.

பிற இடங்களில் இருந்து பெறப்படும் தகவல்கள்

உங்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் வேறு இடங்களில் இருந்தும் பெறக்கூடும், உதாரணமாக:

நீங்கள் ஏதாவது வாங்கும்போது பெறப்படும் தகவல்கள்

நீங்கள் எதையாவது வாங்குவதற்கு Google Paymentsஸைப் பயன்படுத்தும்போது, பரிவர்த்தனை குறித்த தகவல்களை நாங்கள் சேகரிக்கக்கூடும், உதாரணமாக:

எனது தகவல்களை Google எதற்காகப் பயன்படுத்துகிறது?

அனைத்துத் தயாரிப்புகளுக்கும் Google உங்கள் தகவல்களைப் பயன்படுத்தும் முறைகளுடன் கூடுதலாக, எங்களிடம் நீங்கள் வழங்கும் தகவல்களைப் பின்வரும் செயல்கள் போன்றவற்றுக்காகவும் பயன்படுத்துவோம்:

நீங்கள் Google Paymentsஸைப் பயன்படுத்தும் வரை, நீங்கள் வழங்கும் தகவல்களை நாங்கள் வைத்திருக்கக்கூடும். மேலும் சட்டத்திற்கு இணங்க வேண்டிய சூழல்களில் இன்னும் கூடுதல் காலத்திற்கு வைத்திருக்கக்கூடும்.

Google எனது தகவல்களைப் பகிருமா?

அனைத்துத் தயாரிப்புகளுக்கும் Google உங்கள் தகவல்களைப் பகிரும் முறைகளுடன் கூடுதலாக, வேறு சில காரணங்களுக்காக மட்டுமே Googleளுக்கு வெளியே உள்ளவர்களுடன் உங்கள் தகவல்களை நாங்கள் பகிரக்கூடும், உதாரணமாக:

Google வேறு சில நிறுவனங்களையும் சொந்தமாக வைத்திருக்கிறது அல்லது கட்டுப்படுத்துகிறது. சில நேரங்களில், அவற்றின் தினசரி பிசினஸ் செயல்பாடுகளுக்குத் தேவைப்பட்டால் உங்கள் தகவல்களை அவற்றுடன் பகிர்வோம். மற்ற இடங்களிலிருந்து எங்களுக்குக் கிடைக்கக்கூடிய அனைத்துத் தகவல்களும் இதிலடங்கும் (எ.கா. நீங்கள் எந்தெந்த ஸ்டோர்களில் வாங்குகிறீர்கள்).

எனது பெற்றோரிடம் என்னென்ன கட்டுப்பாடுகள் உள்ளன?

உங்கள் பெற்றோரால் இவற்றைச் செய்ய முடியும்

Google Pay எனது தகவல்களை எப்படிப் பாதுகாப்பாக வைத்திருக்கும்?

உங்கள் தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க Google பல நடவடிக்கைகளை மேற்கொள்கிறது, ஆனால் உங்கள் கணக்கின் கடவுச்சொற்கள், பின்கள் மற்றும் பிற முக்கியத் தகவல்களை நீங்கள் ரகசியமாக வைத்திருப்பது அவசியம்.

நினைவில்கொள்ள வேண்டியவை:

உங்கள் Google Wallet ஆப்ஸ் அபாயத்தில் இருப்பதாக நீங்கள் கருதினால், Googleளுக்குத் தெரியப்படுத்த பெற்றோரிடம் உதவி கேளுங்கள்.

கடைசியாகப் புதுப்பித்தது: டிசம்பர் 10, 2025

© 2025 Google – Google Home Google சேவை விதிமுறைகள் முந்தைய தனியுரிமை அறிக்கைகள்