Google Payments தனியுரிமை அறிக்கை

கடைசியாக மாற்றப்பட்ட தேதி: மார்ச் 28, 2022

இந்த Google தனியுரிமைக் கொள்கை நீங்கள் Googleளின் தயாரிப்புகளையும் சேவைகளையும் பயன்படுத்தும்போது உங்களின் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை விவரிக்கிறது. நீங்கள் 18 வயதிற்குக் கீழுள்ள பயனராக இருந்தால், இது தொடர்பான கூடுதல் ஆதாரங்களை Google டீன் ஏஜர்களுக்கான தனியுரிமை வழிகாட்டியில் கண்டறியலாம். Google கணக்கு வைத்திருப்பவர்களுக்கு Google Payments வழங்கப்படுகிறது. இதை நீங்கள் பயன்படுத்துவது Google தனியுரிமைக் கொள்கைக்கு உட்பட்டதாகும். மேலும், இந்தத் தனியுரிமை அறிவிப்பு Google Paymentsஸுக்கு மட்டும் உரிய Google தனியுரிமை நடைமுறைகளை விவரிக்கிறது.

நீங்கள் Google Paymentsஸைப் பயன்படுத்துவது Google Payments சேவை விதிமுறைகளுக்கு உட்பட்டதாகும். இந்த விதிமுறைகள் இந்தத் தனியுரிமை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள சேவைகளை இன்னும் விரிவாக விவரிக்கிறது. இந்த Google Payments தனியுரிமை அறிவிப்பில் வரையறுக்கப்படாத பேரெழுத்திலுள்ள வார்த்தைகள், Google Payments சேவை விதிமுறைகளில் அவற்றுக்கென வழங்கப்பட்டுள்ள அர்த்தத்தைக் கொண்டிருக்கும்.

Google LLC அல்லது Google Payment Corp. ('GPC') உள்ளிட்ட அதற்கு முழுவதும் சொந்தமான துணை நிறுவனங்களால் வழங்கப்படும் சேவைகளுக்கு Google Payments தனியுரிமை அறிவிப்பு பொருந்தும். எந்தத் துணை நிறுவனம் சேவையை வழங்குகிறது என்பதை அறிய, சேவை மூலம் உங்களுக்குக் கிடைக்கும் Google Payments சேவை விதிமுறைகளைப் பாருங்கள். யுனைடெட் கிங்டம் அல்லாத மற்ற ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியில் வசிக்கும் பயனர்கள் (Google சந்தையில் விற்பனை செய்பவர்களைத் தவிர்த்து) தொடர்பான தகவல்களுக்குப் பொறுப்பேற்கும் டேட்டா கண்ட்ரோலர் Google Ireland Limited ஆகும். யுனைடெட் கிங்டமில் வசிக்கும் பயனர்கள் (Google சந்தையில் விற்பனை செய்பவர்களைத் தவிர்த்து) தொடர்பான தகவல்களுக்குப் பொறுப்பேற்கும் டேட்டா கண்ட்ரோலர் Google LLC ஆகும். நீங்கள் யுனைடெட் கிங்டம் அல்லாத மற்ற ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியில் வசிப்பவராகவும் Google சந்தையில் விற்பனை செய்பராகவும் இருந்தால் உங்கள் தகவல்களுக்கும் பொறுப்பேற்கும் டேட்டா கண்ட்ரோலர் Google Payment Ireland Limited ஆகும். நீங்கள் யுனைடெட் கிங்டமில் வசிப்பவராகவும் Google சந்தையில் விற்பனை செய்பவராகவும் இருந்தால் உங்கள் தகவல்களுக்குப் பொறுப்பேற்கும் டேட்டா கண்ட்ரோலர் Google Payment Limited ஆகும். பிரேசிலில் வசிக்கும் பயனர்களின் தகவல்களுக்குப் பொறுப்பேற்கும் டேட்டா கண்ட்ரோலர் Google LLC ஆகும். அத்துடன் பிரேசிலியச் சட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப, இதற்குப் பொறுப்பேற்கும் டேட்டா கண்ட்ரோலர் Google Brasil Pagamentos Ltda நிறுவனமாகவும் இருக்கக்கூடும்.

நாங்கள் சேகரிக்கும் தகவல்கள்

Google தனியுரிமைக் கொள்கையில் பட்டியலிடப்பட்டுள்ள தகவல்களுடன் கூடுதலாக, பின்வரும் தகவல்களையும் நாங்கள் சேகரிக்கக்கூடும்:

நாங்கள் சேகரிக்கும் தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம்?

Google தனியுரிமைக் கொள்கையில் பட்டியலிடப்பட்டுள்ள பயன்பாடுகளுக்கும் கூடுதலாக, வாடிக்கையாளர் சேவை நோக்கங்களுக்காக Google Paymentsஸை உங்களுக்கு வழங்குவதற்காகவும் உரிமைகள், உடைமை அல்லது Google, எங்கள் பயனர்கள்/பொதுமக்களுக்கான பாதுகாப்பிற்கு தீங்கு விளைவதைத் தடுப்பதற்காகவும் (இதில் மோசடி, ஃபிஷிங் அல்லது பிற தவறான நடத்தைகளைத் தடுப்பதும் அடங்கும்) எங்களுக்கும் GPC/எங்களின் பிற துணை நிறுவனங்களுக்கும் நீங்கள் வழங்கும் தகவல்களையும் மூன்றாம் தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட உங்களைப் பற்றிய தகவல்களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். இத்தகைய தகவல்கள் மூன்றாம் தரப்பினரிடம் நீங்கள் கோரும் தயாரிப்புகளையோ சேவைகளையோ வழங்குவதில் அவர்களுக்கு உதவவும் பயன்படுத்தப்படலாம். உங்கள் Google Payments கணக்கின் விதிமுறைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கிறீர்களா என்பதைத் தீர்மானிப்பதற்காக அதை மதிப்பாய்வு செய்வதற்கும் கணக்கின் உங்களின் வருங்கால Google Payments பணப் பரிமாற்றங்கள் குறித்த முடிவுகளை எடுப்பதற்கும் உங்களால் செய்யப்படும் Google Payments பணப் பரிமாற்றங்கள் தொடர்பான பிற சட்டபூர்வமான பிசினஸ் தேவைகளுக்காகவும் இந்தத் தகவல்களைப் பயன்படுத்துகிறோம்.

நீங்கள் பதிவுசெய்தது தொடர்பான தகவல்கள் உங்கள் Google கணக்குடன் சேர்த்தே சேமிக்கப்படும். மேலும் உங்கள் பேமெண்ட் முறையைப் பதிவுசெய்தது தொடர்பான தகவல்கள் Googleளின் சேவையகங்களில் சேமிக்கப்படும். மேலும், சில தரவுக் கூறுகள் உங்கள் மொபைல் சாதனத்திலும் சேமிக்கப்படலாம். சட்டச் செயல்முறைக்கும் ஒழுங்குமுறைக் கடமைகளுக்கும் இணங்கும் நோக்கத்திற்காக, நீங்கள் வழங்கும் தகவல்களை நீண்ட காலத்திற்கு நாங்கள் வைத்திருக்கக்கூடும்.

நாங்கள் தகவல்களைப் பகிரும் விதம்

பின்வரும் சூழ்நிலைகளில் மட்டுமே உங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பிற நிறுவனங்களுடனோ Googleளைச் சாராத தனிநபர்களுடனோ பகிர்வோம்:

உதாரணத்திற்கு, நீங்கள் Google Payments மூலம் பர்ச்சேஸோ பணப் பரிமாற்றமோ செய்யும் நிறுவனம்/தனிநபருடன் உங்களின் குறிப்பிட்ட தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வோம். Google Playயில் Google Payments மூலம் பர்ச்சேஸ் செய்யும் டெவெலப்பருடன் உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதும் இதில் அடங்கும். உங்கள் அஞ்சல் குறியீட்டையும், 'Google Pay மூலம் பர்ச்சேஸ் செய்' போன்ற பட்டன் மூலம் பேமெண்ட்டைத் தொடங்கும்போது உங்களின் பேமெண்ட் வகை குறித்த தகவல்களையும் ஒரு வியாபாரியின் வலைதளம்/ஆப்ஸுக்கு அனுப்புவதும் இதில் அடங்கலாம். புதுப்பிக்கப்பட்ட பர்ச்சேஸ் தகவல்களை (வரி, டெலிவரி செலவு, விலை தொடர்பான பிற தகவல்கள் போன்றவை) கணக்கிட வியாபாரிக்கு உதவும். மேலும் அந்தப் பேமெண்ட் வகையை வியாபாரி ஏற்கிறாரா என்பதையும், பர்ச்சேஸுக்கான குறிப்பிட்ட பேமெண்ட் வகைகளில் உள்ள பலன்கள்/கட்டுப்பாடுகளையும் கண்டறியலாம். Google Payments கணக்கில் மூன்றாம் தரப்புப் பேமெண்ட் முறையைச் சேர்த்தால், அந்தச் சேவையை வழங்கத் தேவைப்படும் சில தனிப்பட்ட தகவல்களை (உங்கள் பெயர், சுயவிவரப் படம், மின்னஞ்சல் முகவரி, IP, பில்லிங் முகவரி, மொபைல் எண், சாதனத் தகவல், இருப்பிடம், Google கணக்கின் செயல்பாடுகள் போன்றவை) மூன்றாம் தரப்புப் பேமெண்ட் வழங்குநருடன் நாங்கள் பகிரலாம்.

நீங்கள் பார்வையிடுகின்ற பங்கேற்கும் வகையான வியாபார தளம்/ஆப்ஸ் மூலம் பேமெண்ட் செய்வதற்கு, தகுதியான பேமெண்ட் முறை கொண்ட Google Payments கணக்கு உங்களிடம் உள்ளதா என்பதை வியாபாரி சரிபார்க்கலாம். பயன்படுத்த முடியாத அம்சங்களைத் தளங்கள்/ஆப்ஸில் பார்ப்பதை இது குறைக்கும்.

மூன்றாம் தரப்பு வியாபாரி, இணையதளம் அல்லது ஆப்ஸுக்கு நீங்கள் நேரடியாக வழங்கும் தகவல்கள் எதுவும் இந்தத் தனியுரிமை அறிக்கையில் வராது. தனிப்பட்ட தகவல்களை நீங்களே நேரடியாகப் பகிரும் வியாபாரிகள் அல்லது பிற மூன்றாம் தரப்பினரின் தனியுரிமை/பாதுகாப்புச் செயல்பாடுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. தனிப்பட்ட தகவல்களை நீங்களே நேரடியாகப் பகிரும் அனைத்து மூன்றாம் தரப்பினரின் தனியுரிமைக் கொள்கைகளையும் மதிப்பாய்வு செய்யுமாறு பரிந்துரைக்கிறோம்.

மூன்றாம் தரப்பினரிடம் பெற்ற தகவல்கள் உட்பட நாங்கள் சேகரிக்கும் தகவல்கள் அனைத்தும் எங்கள் இணை நிறுவனங்கள், அதாவது Google LLCக்குச் சொந்தமான மற்றும் அதனால் கட்டுப்படுத்தப்படும் பிற நிறுவனங்களுடன் பகிரப்படும். நிதி சார்ந்த & நிதி சாரா எங்கள் இணை நிறுவனங்கள் அந்தத் தகவல்களைத் தங்களின் அன்றாட பிசினஸ் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும்.

குறிப்பிட்ட தகவல்களை GPC மற்றும் அதன் இணை நிறுவனங்களுக்கு இடையே பகிர்வதற்கான ஒப்புதலை நீக்கும் உரிமையையும் வழங்குகிறோம். குறிப்பாக, இவற்றுக்கான ஒப்புதலை நீக்கலாம்:

Google LLCயோ அதன் இணை நிறுவனங்களோ, நீங்கள் பார்வையிடுகின்ற மூன்றாம் தரப்புத் தளம்/ஆப்ஸ் மூலம் பேமெண்ட் செய்வதற்கு ஏற்ற Google Payments கணக்கு உங்களிடம் உள்ளதா என்பதை அந்தத் தளம்/ஆப்ஸின் வியாபாரிக்குத் தெரிவிப்பதற்கான ஒப்புதலை நீக்கலாம்.

ஒப்புதலை நீக்கினால், உங்கள் விருப்பத்தை மாற்றச் சொல்லும் வரை ஒப்புதல் நீக்கப்பட்டிருக்கும்.

இவற்றை விரும்பவில்லை எனில் உங்கள் விருப்பத்தேர்வை குறிப்பிடவும்: GPC மற்றும் அதன் இணை நிறுவனங்களுக்கு இடையே உங்கள் கடன் தகுதி தொடர்பான தனிப்பட்ட தகவல்களைப் பகிர்தல், நாங்கள் சேகரித்துப் பகிர்ந்த தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி இணை நிறுவனங்கள் மார்க்கெட்டிங் செய்தல், Google LLCயோ அதன் இணை நிறுவனங்களோ உங்களிடம் Google Payments கணக்கு உள்ளதா என்பதை நீங்கள் பார்வையிடுகின்ற மூன்றாம் தரப்புத் தளம்/ஆப்ஸுக்குத் தெரிவித்தல். விருப்பத்தேர்வுகளை மாற்ற உங்கள் கணக்கில் உள்நுழைந்து, Google Payments தனியுரிமை அமைப்புகள் பக்கத்திற்குச் செல்லவும்.

GPC சாராதவர்களுடனும் இணை நிறுவனங்களுடனும் உங்கள் தனிப்பட்ட தகவல்களை இந்தத் தனியுரிமை அறிக்கையிலும் Google தனியுரிமைக் கொள்கையிலும் குறிப்பிட்டுள்ளபடி மட்டுமே பகிர்வோம். மேலே விவரித்துள்ளபடி, Google Payments என்பது Google கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் ஒரு தயாரிப்பாகும். Google கணக்கு உருவாக்குவதற்காக Google LLCக்கு நீங்கள் வழங்கும் தரவானது இந்தத் தனியுரிமை அறிக்கையில் கொடுத்துள்ள ஒப்புதல் நீக்கத்தால் பாதிக்கப்படாது.

தகவல் பாதுகாப்பு

எங்களின் பாதுகாப்புச் செயல்பாடுகள் குறித்து மேலும் அறிய, முதன்மை Google தனியுரிமைக் கொள்கையைப் பாருங்கள்.

உங்கள் Google Payments கணக்கின் பாதுகாப்பானது கணக்கின் கடவுச்சொற்கள், பின்கள் மற்றும் சேவையை அணுகுவதற்கான பிற தகவல்களை ரகசியமாக வைத்திருப்பதைப் பொறுத்துள்ளது. கணக்கு விவரங்களை மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்தால் அவரால் உங்களுடைய கணக்கையும் தனிப்பட்ட தகவல்களையும் அணுக முடியும்.

உங்கள் மொபைல் சாதனத்திற்கான அணுகலையும் சாதனத்திலுள்ள Google Payments ஆப்ஸுக்கான அணுகலையும் கட்டுப்படுத்துவது உங்களுடைய பொறுப்பாகும். கடவுச்சொற்கள் மற்றும்/அல்லது பின்னை யாருடனும் பகிராமல் ரகசியமாக வைத்திருப்பதும் இதில் அடங்கும். Google Payments ஆப்ஸிலுள்ள தகவல்களின் பாதுகாப்பு மீறப்பட்டதாக நீங்கள் கருதினால் அதுகுறித்து Googleளுக்கோ தொடர்புடைய கூட்டாளருக்கோ தெரிவிப்பதும் உங்களுடைய பொறுப்பாகும்.

© 2020 Google – Google Home Google சேவை விதிமுறைகள் தனியுரிமை தொடர்பான முந்தைய அறிக்கைகள்